தள்ளுவண்டி கடையை சேதப்படுத்திய காவல் ஆய்வாளர் மீது வழக்கு பதிவு

0 2986

தள்ளு வண்டி கடையை சேதபடுத்தியதாக சென்னை பெரியமேடு முன்னாள் காவல் ஆய்வாளர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

கடந்த பிப்ரவரி மாதம் பெரியமேடு காவல்நிலையத்தில் சட்டம் மற்றும் ஒழுங்கு பிரிவு ஆய்வாளராக இருந்த சிவராஜன், அதே பகுதியில் அப்துல் ரஹ்மான் என்பவர் வைத்திருந்த தள்ளுவண்டி கடையை சேதப்படுத்தியதாக உயர்நீதிமன்றத்தில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி சார்பில் வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், சிசிடிவி காமராவில் பதிவான காட்சிகளின் அடிப்படையில் முன்னாள் காவல் ஆய்வாளார் சிவராஜன் மீது வழக்கு பதிவு செய்ய உத்தரவிட்டது. அதனடிப்படையில், பெரியமேடு காவல்நிலையத்தில் சிவராஜன் மீது வழக்கு பதிவு செய்யயப்பட்டது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments