கடற்கரை ஓரங்களில் படிந்த பெட்ரோலிய கழிவுகளை அகற்றும் பணி தீவிரம்

0 155

பிரேசில் நாட்டில் உள்ள கடற்கரையில் படிந்த பெட்ரோலிய கழிவுகளை அகற்றும் பணியில் பொதுமக்களுடன் இணைந்து ராணுவ வீரர்களும் ஈடுபட்டுள்ளனர்.

வடக்கு பிரேசில் உள்ள பெர்னாம்புகோ மாநிலத்தில் உள்ள கடற்கரை பகுதியில் கடந்த செப்டம் மாதம் 12ம் தேதியில் இருந்து சுமார் 600 டன்க்கும் அதிகமான பெட்ரோலிய கழிவுகளை அகற்றியதாக பிரேசில் அரசு தெரிவித்துள்ளது. இந்நிலையில், பெர்னாம்புகோ மாநிலத்தில் உள்ள கடற்கரை ஓரங்களில் படிந்த அடர்த்தியான பெட்ரோலிய கழிவுகளை அகற்றும் பணியில் ராணுவ வீரர்கள் களமிறங்கினர்.

கடற்கரை மணலை சலித்து அவற்றில் படிந்துள்ள பெட்ரோலிய கழிவுகள் அகற்றப்பட்டு வருகின்றன. இந்த பெட்ரோலிய கழிவுகள் கடலில் கலப்பதற்கு வெனிசுலா நாடு தான் காரணம் என்று பிரேசில் அரசு குற்றம்சாட்டி வரும் நிலையில், அதனை அந்நாட்டு அரசு மறுத்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments