திற்பரப்பு அருவியில் குளிக்க 6வது நாளாக தடை நீட்டிப்பு

0 188

குமரி மாவட்டத்தில் தொடர்ந்து பெய்து வரும் மழையால் திற்பரப்பு அருவியில் வெள்ளம் ஆர்ப்பரித்து கொட்டுவதையடுத்து சுற்றுலா பயணிகளுக்கு 6 வது நாளாக தடை விதிக்கப்பட்டுள்ளது.

குமரி மாவட்டத்தின் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் கனமழை நீடிப்பதால் சிற்றார் ஒன்று அணைக்கு நீர்வரத்து அதிகரித்து 18 அடி உயரம் கொண்ட அணையின் நீர்மட்டம் 16 அடியை எட்டியுள்ளது. இதையடுத்து அணையில் இருந்து, வினாடிக்கு 537 கன அடி உபரி நீர் கோதையாற்றில் வெளியேற்றப்பட்டுள்ளது.

கோதையாற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுவதால், அதன் குறுக்கே உள்ள திற்பரப்பு அருவியிலும் வெள்ளம் ஆர்ப்பரித்து கொட்டுகிறது.

இதனால் 6 வது நாளாக சுற்றுலா பயணிகளுக்கு அருவியில் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. தொடர் மழை காரணமாக இங்கு வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை கணிசமாக குறைந்து விட்டது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments