சிவகங்கை மாவட்டம் முழுவதும் 144 தடை உத்தரவு

0 428

மருதுபாண்டியர் குருபூஜை மற்றும் தேவர் குருபூஜையை முன்னிட்டு, சிவகங்கை மாவட்டம் முழுவதும் இன்று முதல் 144 தடை உத்தரவு அமலுக்கு வந்துள்ளது.

அக்டோபர் 27ஆம் தேதி காளையார்கோவிலில் மருதுபாண்டியர் குருபூஜை நடைபெற உள்ளது. இதனையடுத்து 30ஆம் தேதி ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன்னில் தேவர் குரு பூஜை நடைபெறுகிறது.

இதன் காரணமாக சிவகங்கை மாவட்டத்தில் இன்று முதல் வரும் 31ம் தேதி வரை 9 நாட்களுக்கு 144 தடை உத்தரவு பிறப்பித்து மாவட்ட ஆட்சியர் ஜெயகாந்தன் உத்தரவிட்டுள்ளார்.

சட்ட ஒழுங்கை பாதுகாக்கும் விதமாகவும், பொது அமைதிக்கு பங்கம் விளைவிக்காத வண்ணம் இருக்க இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மாவட்ட நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments