தொடர் மழை காரணமாக ஏற்காட்டில் உள்ள பெரிய ஏரி நிரம்பியது

0 216

தொடர் மழையால் சேலம் மாவட்டம் ஏற்காட்டில் உள்ள பெரிய ஏரி நிரம்பி ரம்மியமாக காட்சி அளிக்கிறது.

இந்த ஏரியில் தான் சுற்றுலா வளர்ச்சி கழகத்தின் படகு இல்லம் செயல்பட்டு வருகிறது. லாங்கில் பேட்டை, ஜெரினாக்காடு, எம்.ஜி.ஆர்.நகர், சேவியர் காட்டேஜ் உள்ளிட்ட பகுதிகளுக்கு இந்த ஏரியில் இருந்தும், ஏரி கரையில் அமைக்கப்பட்டுள்ள கிணறுகளில் இருந்தும் தண்ணீர் விநியோகிக்கப்படுகிறது.

கோடை காலத்தில் இந்த ஏரியில் தண்ணீர் அளவு மிகவும் குறைந்ததால், பொதுமக்களுக்கு தண்ணீர் விநியோகிப்பதில் சிரமம் ஏற்பட்டது. ஆனால், கடந்த சில நாட்களாக அங்கு பெய்த மழையால், ஏற்காடு மலையில் உள்ள நீரோடைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதனால், ஏற்காடு பெரிய ஏரி நிரம்பியது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments