கர்த்தார்புர் தொடர்பான ஒப்பந்தம் நாளை கையெழுத்தாகிறது

0 346

கர்த்தாபுர் குருதுவாராவின் இந்திய பாதையை வரும் நவம்பர் 9ம் தேதி பிரதமர் மோடி திறந்து வைக்க உள்ளார்.

பஞ்சாப் முதலமைச்சர் அமரேந்தர் சிங் தலைமையில் கர்த்தார்புர் யாத்திரை செல்லும் முதல் குழுவில் முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங் உள்ளிட்டோர் செல்ல உள்ளதாக உள்துறை அமைச்சக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அக்குழுவினர் அன்றைய தினமே கர்த்தார்புருக்கு சென்று இந்தியா திரும்புவார்கள்.

கர்த்தார்புர் குருதுவாரா தொடர்பாக இந்தியா- பாகிஸ்தான் இடையிலான முக்கிய ஒப்பந்தம் நாளை இருநாட்டு எல்லைப்பகுதியான ஜீரோ பாயிண்டில் கையெழுத்தாக உள்ளது.

இருநாட்டு அதிகாரிகளும் எல்லை தாண்டாமல் இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட உள்ளனர். பக்தர்களிடம் தலா 1500 ரூபாய் கட்டணம் வசூலிக்கும் பாகிஸ்தான் முடிவால் இழுபறி நீடித்து ஒப்பந்தம் கையெழுத்தாவதில் தாமதம்ஏற்பட்டது.

ஒப்பந்தத்தில் கையெழுத்திட பாகிஸ்தான் முன்வந்த போதும் கட்டணத்தை திரும்பப்பெறுவதற்கான எந்த உத்தரவாதத்தையும் அளிக்கவில்லை.கட்டணம் திரும்பப் பெறப்பட்டால் அதற்கேற்றவாறு ஒப்பந்தம் மாற்றி எழுதப்படும் என்று மத்திய வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments