ரயில்களின் வேகத்தை அதிகப்படுத்த ரூ 18,000 கோடி முதலீடு

0 244

பயணிகளுக்கான விரைவு ரயில்களை மணிக்கு 160 கிலோமீட்டர் வேகத்தில் இயக்க ரயில்வே நிர்வாகம் திட்டமிட்டுள்ளது. இதற்கான கட்டுமானப் பணிகளுக்காக 18 ஆயிரம் கோடி ரூபாய் முதலீடு செய்யப்பட உள்ளது.

நான்கு ஆண்டுகளில் இத்திட்டம் நிறைவேறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது ரயில்களின் வேகம் அதிகபட்சமாக மணிக்கு 99 கிலோமீட்டராக இருந்து வருகிறது.

மும்பை-டெல்லி, டெல்லி-கொல்கத்தா தடங்களில் மணிக்கு 160 கிலோமீட்டர் வேகத்தில் ரயில்களை இயக்க ரயில்வேத்துறை திட்டமிட்டுள்ளது. டெல்லி- அகமதாபாத் இடையே 320 கிலோமீட்டர் வேகத்தில் புல்லட் ரயிலை இயக்குவதற்கான கட்டுமானப் பணிகளும் நடைபெற்று வருகின்றன.

தண்டவாளங்களை பலப்படுத்துவது, ரயில்கள் வேகமாக செல்லும் தடங்களில் யாரும் குறுக்கே வராதிருக்க தடுப்பு வேலிகள் அமைத்தல், சிக்னல்களை மேம்படுத்துதல் போன்ற பணிகளுக்காகவும் ரயில் நிலையங்களை நவீனப்படுத்துதல், ரயில் பயணிகளுக்கான அடிப்படை வசதிகளை மேம்படுத்துதல் போன்றவற்றுக்காகவும் 18 ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கப்பட உள்ளது.

இதுவரை 28 ஆயிரம் கிலோமீட்டர் ரயில்பாதை மின்மயமாக்கப்பட்டுள்ளதாகவும், அடுத்த ஓராண்டில் மேலும் 7 ஆயிரம் கிலோமீட்டர் பாதை மின்மயமாக்கப்படும் என்றும் ரயில்வேதுறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments