வங்கித்துறையில் தீவிரமான சீர்திருத்தம் தேவை -அபிஜித் பானர்ஜி

0 274

பிரதமர் மோடியை சந்தித்து பேசிய நிலையில், முன்னதாக டெல்லியில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துக் கொண்ட பொருளாதார நிபுணர் அபிஜித் பானர்ஜி இந்திய வங்கித்துறையில் தீவிரமான சீர்திருத்தங்கள் தேவை என்று வலியுறுத்தியுள்ளார்.

இந்திய வங்கித் துறையில் தற்போது ஏற்பட்ட நெருக்கடி மிகவும் அச்சுறுத்தும் வகையில் இருப்பதாக குறிப்பிட்டார்.கவலையை ஏற்படுத்தி வரும் இச்சூழலில் நாம் எச்சரிக்கை உணர்வுடன் செயல்பட்டாக வேண்டும் என்று கூறிய அவர், பொதுத்துறை வங்கிகளில் பங்கு மூலதனத்தை மத்திய அரசு 50 சதவீதத்திற்கும் கீழாக குறைக்கும்படி வலியுறுத்தியுள்ளார்.

அப்போதுதான் பொதுத்துறை வங்கிகள் மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணையத்தின் பிடியில் இருந்து வெளியே வர முடியும் என்று தெரிவித்துள்ள அபிஜித், வங்கித்துறை சுதந்திரமாக செயல்படவும் முடிவுகள் எடுக்கவும் மத்திய கண்காணிப்பு ஆணையத்தின் மீதான பயம் தடையாக உள்ளதாக குறிப்பிட்டார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments