போக்குவரத்து ஊழியர்களுக்கு அறிவித்தபடி போனஸ் வழங்கப்படும்

0 373

போக்குவரத்து ஊழியர்களுக்கு அரசு அறிவித்தபடி தீபாவளி போனஸ் வியாழக்கிழமை முதல் வழங்கப்படும் என்றும் முன்னதாக புதன்கிழமை தீபாவளி முன்பணம் பெற்றுக்கொள்ளலாம் என்றும் அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் கூறினார்.

கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் நடைபெற்ற அரசு நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற அமைச்சர், பின் செய்தியாளர்களை சந்தித்தார்.

தீபாவளிக்காக வழக்கமான பேருந்துகளோடு 21 ஆயிரத்து 526 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படவுள்ளதாகவும் அமைச்சர் கூறினார்.

குறைந்த தூரம் செல்லக் கூடிய குளிரூட்டப்பட்ட 150 பேருந்துகள் விரைவில் இயக்கப்படவுள்ளதாகவும் அமைச்சர் விஜயபாஸ்கர் கூறினார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments