நெருங்கும் தீபாவளி பட்டாசு விற்பனை மந்தம்..! பசுமைப் பட்டாசு என்றால் என்ன?

0 320

சுற்றுச்சூழல் நலன் கருதி அறிமுகப்படுத்தப்பட்ட பசுமைப் பட்டாசுகள் இந்த ஆண்டும் முழுமையாக விற்பனைக்கு வரவில்லை , உற்பத்தி பாதிப்பு பட்டாசு விலையேற்றத்தின் காரணமாக பட்டாசு விற்பனையும் சூடுப்படிக்க வில்லை என வியாபாரிகள் வருத்தம் தெரிவித்துள்ளனர்...

பட்டாசு விற்பனை மந்தம்:

சில ஆண்டுகளுக்கு முன்னர் வரை தீபாவளி பண்டிகைக்கு ஒருமாத காலத்திற்கு முன்னரே பட்டாசு சத்தம் வெடிச் சத்தம் கேட்கத் தொடங்கிவிடும். ஆனால் சமீபத்தில் பட்டாசு வெடிப்பதற்கான ஆராவரம் பொதுமக்களிடையே கனிசமாக குறைந்துள்ளதை பரவலாக பார்க்க முடிகிறது.

சென்னையில் ராயப்பேட்டை ஒய்எம்சிஏ, நந்தம்பாக்கம், தீவுத்திடல் போன்ற இடங்களில் பட்டாசு கண்காட்சி அமைக்கப்பட்டிருக்கிறது. தீபாவளிக்கு இன்னமும் நான்கு நாட்களே உள்ள நிலையில், தற்போது வரை பட்டாசு விற்பனை சூடுபிடிக்கவில்லை எனக்கூறுகின்றனர் விற்பனையாளர்கள்.

பசுமைப் பட்டாசு என்றால் என்ன?

உலகளவில் சுற்றுச்சூழல் நலன் கருதி பசுமைப்பட்டாசு வகைகளை அறிமுகப்படுத்திய முதல் நாடு இந்தியா தான். தேசிய சுற்றுச்சூழல் பொறியியல் ஆராய்ச்சி நிறுவனத்தின் கண்டுப்பிடிப்பான பசுமைப் பட்டாசுகள் கந்தக மற்றும் நைட்ரஜன் மாசு துகல்களை குறைவாகவே வெளியேற்றும் இதனால் காற்றில் கலக்கப்படும் மாசின் அளவு குறைந்து காற்று மாசுப்படுவது குறைக்கப்பட்டு சுற்றுச்சூழல் பாதிப்பு குறையும் சூழல் உருவாகிறது.

வெடித்த பின்னர் கரியாக காற்றில் கலக்காமல் நீர்த்துளியாக மாறும் தன்மை கொண்டதும் ஒருவகைப் பசுமைப்பட்டாசுகள் ஆனால் இந்த வகைகள் முழுமையாக உற்பத்தி செய்து நடைமுறைக்கு வர இன்னமும் இரண்டு ஆண்டுகள் ஆகும் எனும் ரபீக்ராஜா, பட்டாசின் மீதுள்ள பசுமைப்பட்டாசு எனக் குறிக்கும் முத்திரையை கொண்டு பொதுமக்கள் அதனை அடையாளம் காணலாம் என்கிறார்.

சிறுவர், பெரியவர்களுக்கான புதிய வகை பட்டாசுகள்:

பாகுபலி வெடி, ஜல்லிக்கட்டு வெடி, பிகில் வெடி, கோல்டன் ஸ்பைடர், 4ஜி ஸ்பெக்ட்ரம், ஏரியல் அவுட் போன்ற பெரியவர்கள் வெடிக்கும் புதிய வெடி வகைகளும் ஸ்டார் சக்கரம் , ஜம்பிங் ப்ராக், ஜியான்ட் சக்கரம் , போன்ற சிறுவர்களுக்கான புதிய வெடி வகைகளும் இந்த ஆண்டு சந்தையை அலங்கரிக்கிறது.

அதே நேரம் தரமில்லாத பட்டாசு வகைகளும் பல இடங்களில் விற்பனைக்கு வந்துள்ளதாக எச்சரிக்கும் விற்பனையாளர்கள் முறையாக ஜிஎஸ்டி உடன் உள்ள பில் கொடுக்கும் விற்பனையாளர்களிடம் பட்டாசு வாங்கும் போது தரமில்லாத பட்டாசுகளை தவிர்க்க முடியும் எனவும் எச்சரிக்கின்றனர் .

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments