சீன பட்டாசுகளை சட்டவிரோதமாக இறக்குமதி செய்வோர் மீது நடவடிக்கை: சுங்கத்துறை ஆணையர்

0 314

சீன பட்டாசுகளை இறக்குமதி செய்ய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருப்பதாகவும், இதை மீறி அந்த பட்டாசுகளை சட்டவிரோதமாக இறக்குமதி செய்தாலோ, விற்பனை செய்தாலோ கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று மத்திய சுங்கத் துறை ஆணையர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள அறிவிப்பில், சீன பட்டாசுகளை வாங்குவது, விற்பனை செய்வது உள்ளிட்ட செயல்களில் ஈடுபடுவோர் 1962ம் ஆண்டு சுங்கத்துறை சட்டத்தின்கீழ் தண்டிக்கப்படுவர் என குறிப்பிட்டுள்ளார்.

உடலுக்கும், சுற்றுச்சூழலுக்கும், நாட்டின் பொருளாதாரத்துக்கும் சீன பட்டாசுகள் பாதிப்பை ஏற்படுத்துவதாகவும், ஆதலால் அந்த பட்டாசுகளை பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டுமென்று பொதுமக்களை அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.

சீன பட்டாசுகளின் விற்பனை குறித்தும், அது பதுக்கி வைக்கப்பட்டிருப்பது குறித்தும் தெரிந்தால் சென்னை சுங்கத்துறை கட்டுப்பாட்டு அலுவலகத்துக்கு 044-25246800 என்ற எண்ணில் தகவல் தெரிவிக்கலாம் எனவும் கூறியுள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments