ATM கொள்ளையனை 1 மணி நேரத்தில் கைது செய்த போலீசார்

0 400

சென்னை பல்லாவரம் அருகே நள்ளிரவில் ஏ.டி.எம் இயந்திரத்தை உடைத்து திருட முயன்ற நபரை ஒரு மணி நேரத்தில் போலீசார் கைது செய்தனர்.

பம்மலில் உள்ள ஐசிஐசிஐ வங்கியின் ஏ.டி.எம் மையத்திற்கு நள்ளிரவில் சென்ற மர்ம நபர், அதனை உடைத்து பணத்தை திருட முயன்றுள்ளார்.

அந்த சமயத்தில் எச்சரிக்கை அலாரம் அடிக்கவே தப்பியோடியுள்ளார். பின்னர் மும்பையில் உள்ள ஐசிஐசிஐ வங்கியின் தலைமையகத்தில் இருந்து, சங்கர் நகர் காவல் நிலையத்திற்கு கொள்ளை முயற்சி தொடர்பான புகைப்படங்கள் அனுப்பி வைக்கப்பட்டன.

உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் ஏ.டி.எம் மையத்திற்கு அருகாமையில் உள்ள கட்டிடத்தில் தங்கி வேலை செய்து வந்த ஒருவரை பிடித்து விசாரித்தனர்.

அப்போது அந்த நபர் விழுப்புரம் மாவட்டம் உளுந்தூர்பேட்டையை சேர்ந்த அருள்மணி என்பதும், மது குடிப்பதற்காக பணம் வேண்டி ஏ.டி.எம் மையத்தில் கொள்ளை முயற்சியில் ஈடுபட்டதும் தெரியவந்தது. அவரை கைது செய்த போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments