தனியார் பேருந்தின் பக்கவாட்டில் அரசுப் பேருந்து மோதி விபத்து

0 481

சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே தனியார் பேருந்தின் பக்கவாட்டில் அரசு பேருந்து மோதிய விபத்தில் 13 பேர் காயமடைந்தனர்.

ஆத்தூரில் இருந்து சேலம் நோக்கிச் சென்ற டிரிப்பிள் எஸ் என்ற தனியார் பேருந்து, வாழப்பாடி பேருந்து நிலையத்துக்குள் சென்றுவிட்டு, சர்வீஸ் சாலையைக் கடந்து சென்னை - சேலம் நெடுஞ்சாலையில் திரும்பியுள்ளது. அப்போது சேலத்தில் இருந்து சென்னை நோக்கி வந்த அரசு விரைவுப் பேருந்து தனியார் பேருந்தின் பக்கவாட்டில் அதிவேகத்தில் மோதியது.

இதில் தனியார் பேருந்தில் பயணித்த 13 பயணிகள் படுகாயமடைந்தனர். அந்த பேருந்தின் பக்கவாட்டுப்பகுதியும் கடுமையாக சேதமடைந்தது. காயமடைந்தவர்கள் அனைவரும் உடனடியாக 108 ஆம்புலன்ஸ் மூலம் சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டனர்.

இரண்டு பேருந்துகளின் ஓட்டுநர்களிடமும் வாழப்பாடி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த விபத்து காரணமாக தேசிய நெடுஞ்சாலையில் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments