பிரேசிலில் சிறிய ரக விமானம் விழுந்து வெடித்ததில் விமானி உள்பட 3 பேர் பலி

0 127

பிரேசில் நாட்டில் விமானம் ஒன்று புறப்பட்ட சிறிது நேரத்தில், குடியிருப்பு பகுதியில் விழுந்து  நொறுங்கி  தீப்பற்றியதில் 3 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

அங்குள்ள கர்லோஸ் பிரேட்ஸ்((carlos prates)) விமான நிலையத்திலிருந்து நேற்று காலை தனிநபர் இயக்கி சென்ற சிறிய ரக விமானம், பெலோ ஹாரிசான்டே குடியிருப்பு பகுதி வழியாக பறந்து கொண்டிருந்தபோது, திடீரென கீழே விழுந்து, தெரு சாலையில் நின்ற 3 கார்கள் மீது மோதி வெடித்தது. 

இந்த கோர விபத்தில் விமான பயணி, பாதசாரி ஒருவர் மற்றும் காரில் இருந்த ஒருவர் என 3 பேர் பரிதாபமாக உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப கோளாறு அல்லது இன்ஜின் பழுது காரணமாக இந்த விபத்து ஏற்பட்டதா என்பது இன்னும் தெரியாத நிலையில், அதிகாரிகள் அதுகுறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments