பிகில் படத்துக்கு தடை கோரிய மனு மீது இன்று தீர்ப்பு

0 355

நடிகர் விஜய் நடித்துள்ள பிகில் படத்துக்கு தடை கோரி தாக்கல் செய்யப்பட்ட மனு மீது சென்னை உயர்நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்குகிறது.

பிகில்  படத்தின் கதை தன்னுடையது எனக் கூறி, உதவி இயக்குனர் செல்வா என்பவர் தாக்கல் செய்த வழக்கு, உயர்நீதிமன்றத்தில் நீதிபதி சுரேஷ்குமார் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, இயக்குனர் அட்லி தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர், பிகில் படத்தின் கதை, 2018 ஜூலையில் பதிவு செய்யப்பட்டது எனவும், ஆனால் மனுதாரர் தன் கதையை 2018 அக்டோபரில் தான் பதிவு செய்துள்ளார் எனவும் வாதிட்டார்.

படத் தயாரிப்பு நிறுவனம் சார்பில் வாதிட்ட வழக்கறிஞர்  காப்புரிமை மீறப்பட்டதாக, கீழமை நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கில் மனுதாரர் கூறவில்லை எனவும், பணம் பறிப்பதற்காகவும், விளம்பரத்துக்காகவும் தொடரப்பட்டுள்ள இந்த வழக்கை தள்ளுபடி செய்ய வேண்டும் எனவும் கூறினார். இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி சுரேஷ்குமார் தீர்ப்பை ஒத்திவைத்தார். இந்த வழக்கில் இன்று பிற்பகல் 2.15 மணிக்கு தீர்ப்பு வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments