மும்பை ஆரே காலனியில் மரங்களை வெட்ட தடை தொடரும்

0 416

மும்பை ஆரே காலனியில் உள்ள மரங்களை வெட்ட விதிக்கப்பட்ட தடை தொடரும் ஆனால் வாகன நிறுத்துமிடம் அமைக்க எந்த தடையும் இல்லை என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.

மும்பை ஆரே காலனி பகுதியில் மெட்ரொ நிலையத்திற்கான வாகன நிறுத்துமிடம் அமைப்பதற்காக 2 ஆயிரத்து 700 மரங்களை வெட்ட அனுமதி அளித்த மும்பை உயர்நீதிமன்ற உத்தரவுக்கு, கடந்த 7 ஆம் தேதி உச்சநீதிமன்றம் தடை விதித்து உத்தரவிட்டது.

இந்நிலையில், இந்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் நீதிமன்ற உத்தரவுக்கு பிறகு ஆரே பகுதியில் எந்த மரங்களும் வெட்டப்படவில்லை என தெரிவித்தார்.

இதையடுத்து, மெட்ரோ நிலையத்துக்கான வாகன நிறுத்துமிடம் அமைக்க எந்த தடையும் இல்லை என்றும், ஆனால் மரங்களை வெட்ட விதிக்கப்பட்டிருந்த தடை தொடரும் என நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

அப்பகுதியில் இதுவரை வெட்டப்பட்ட மரங்களுக்கு பதிலாக புதிதாக நடப்பட்ட மரங்கள் குறித்த விவரங்களை நீதிமன்றத்தில் அறிக்கையாக தாக்கல் செய்ய உத்தரவிட்ட நீதிபதிகள், நவம்பர் 15-ம் தேதிக்கு விசாரணையை தள்ளிவைத்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments