தரையிறங்கும் போது விபத்தில் சிக்கிய பயிற்சி விமானம்

0 446

உத்தரபிரதேச மாநிலம் அமேதி மாவட்டத்தில் உள்ள இந்திரா காந்தி தேசிய விமான அகாடமிக்கு சொந்தமான பயிற்சி விமானம் ஒன்று தரையிறங்கும்போது  திடீரென தீப்பற்றி விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில் பயிற்சி விமானி அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பியுள்ளார். பர்சாத்கஞ்ச்((Fursatganj)) பகுதியில் அமைந்துள்ள இந்திரா காந்தி தேசிய விமான அகாடமிக்கு சொந்தமான விமானத்தில் பயிற்சி விமானிகள் பயிற்சியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது, ஓடுபாதையில் விமானத்தை தரையிறக்கும்போது, எதிர்பாராத விதமாக விபத்துக்குள்ளான விமானம் தீப்பற்றி எரிந்துள்ளது.

தகவலறிந்து வந்த தீயணைப்புத்துறை மற்றும் அகாடமியின் ஊழியர்கள் விபத்துக்குள்ளான விமானத்திலிருந்த பயிற்சி விமானியை பத்திரமாக மீட்டனர். கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு, இந்த அகாடமிக்கு சொந்தமான பயிற்சி விமானம் விபத்துக்குள்ளானது குறிப்பிடத்தக்கது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments