டி.என்.பி.எஸ்.சி. குரூப் 2 தேர்வுத் திட்டத்தில் மாற்றம்.!

0 2090

மிழ் மொழிக்கு முக்கியத்துவம் தரும் வகையில் குரூப் 2 தேர்வு பாடத்திட்டம் மாற்றப்படுவதாக டிஎன்பிஎஸ்சி அறித்துள்ளது.

தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் கடந்த மாதம் 27 ஆம் தேதி குரூப் 2 மற்றும் குரூப் 2ஏ ஆகிய தேர்வுகளுக்கு பொதுவான பாடத்திட்டம் மற்றும் தேர்வுத்திட்டம் ஆகியவற்றை வெளியிட்டது. இரண்டு தேர்வுகளுக்கும் முதனிலைத்தேர்வு மற்றும் முதன்மைத் எழுத்துத் தேர்வும் கட்டாயமாக்கப்பட்டது.

இந்த நிலையில் ஒரு சில மாற்றங்கள் தேவை என சிலர் கோரிக்கை விடுத்ததை அடுத்து, தேர்வுகளுக்கான தேர்வுதிட்டத்தில் சில மாற்றங்களை செய்துள்ளது. முதனிலைத் தேர்வுக்கு ஏற்கனவே தேர்வாணையம் புதிதாக அறிவித்துள்ள பாடத்திட்டம் மற்றும் தேர்வு திட்டத்தில் எவ்வித மாற்றமும் கிடையாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இருப்பினும் தமிழ் மொழிக்கு முக்கியத்துவம் தரும் வகையில் தமிழ்நாட்டின் வரலாறு, மரபு, பண்பாடு, சமூக - அறிவியல் இயக்கங்கள், தமிழகத்தின் வளர்ச்சி நிர்வாகம், என்ற தலைப்பின் கீழ் உள்ள அலகுகள் 8, 9 க்கு அதிக முக்கியத்துவம் தரும் வகையில் கேள்விகள் கேட்கப்படும் என்று டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது.

முதனிலைத் தேர்வுக்கான மாதிரி வினாத்தாள் இம்மாத இறுதியில் தேர்வாணைய இணையதளத்தில் வெளியிடப்படும் என்றும் தேர்வுக்கு தயாராவதற்கு தேர்வர்களுக்கு போதிய கால அவகாசம் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஒரே தேர்வாக அறிவிக்கப்பட்டிருந்த முதன்மை எழுத்து தேர்வு தற்போது இரண்டு தேர்வுகள் கொண்டதாக மாற்றியமைக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே அறிவிக்கப்பட்ட முதன்மை எழுத்து தேர்வின் பகுதி அ தனித்தாளாக தகுதித்தேர்வாக மாற்றப்பட்டுள்ளது. 100 அதிகபட்ச மதிப்பெண்கள் கொண்ட தேர்வாக ஒன்றரை மணி நேரம் நடைபெறும்.

தகுதித்தேர்வில் குறைந்தபட்சமாக 25 மதிப்பெண்ணைப் பெறுவர்கள் மட்டுமே தாள் 2 மதிப்பீடு செய்யப்படும். இந்த தகுதி தேர்வில் பெறப்படும் மதிப்பெண்கள் தர நிர்ணயத்திற்கு கணக்கில் கொள்ளப்படாது. தமிழக கிராமப்புற மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு இத்தேர்வுக்கு நிர்ணயிக்கப்பட்டிருந்த தரம் பட்டப்படிப்பில் இருந்து பத்தாம் வகுப்பு தரத்திற்கு தற்போது மாற்றப்பட்டுள்ளது.

பகுதி அ தவிர்த்து, ஏற்கனவே அறிவிக்கப்பட்ட பாடத்திட்டத்தின் ஏனைய பகுதிகள் அனைத்தும் தாள் 2 தேர்வாக மாற்றப்பட்டுள்ளது. முன்னர் 200 மதிப்பெண் கொண்ட தேர்வானது தற்போது 300 மதிப்பெண் கொண்ட தேர்வாக 3 மணி நேரம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments