இந்தியாவின் சாதனையை முறியடிக்க பகீரத முயற்சியெடுக்கும் சீனா

0 815

பன்னாட்டுச் சந்தையில் இந்தியாவின் விண்வெளி போட்டியை சமாளிக்கும் வகையில், மற்ற நாடுகளின் செயற்கைக்கோள்களை சுமந்து செல்லும் வணிக ரீதியிலான ராக்கெட் தயாரிப்புத் திட்டங்களை, சீனா வெளியிட்டிருக்கிறது.

இந்தியாவுடன் போட்டியிட நினைத்தாலும், இஸ்ரோவின் குறைந்த கட்டண சேவையை கண்டு, சீனா சற்று மிரண்டு போயிருக்கிறது. மேலும், கடந்த 2017ஆம் ஆண்டு, ஒரே ராக்கெட்டில், 104 செயற்கைக்கோள்களை எடுத்துச் சென்று, புவிசுற்றுவட்டப்பாதையில் நிலைநிறுத்தி இந்தியாவின் இஸ்ரோ உலக சாதனை படைத்தது. 

இதனால், விண்வெளி வணிகச் சந்தை குறித்து பெருங்கவலையில் ஆழ்ந்த சீனா, பன்னாட்டுச் சந்தையை தனதாக்கி கொள்ள பகீரத முயற்சிகளை மேற்கொண்டிருக்கிறது. இதன் ஒருபகுதியாக, அடுத்தாண்டு, அதற்கு அடுத்தாண்டும், பயன்பாட்டிற்கு கொண்டுவருவதற்கு ஏதுவாக, புதிய தலைமுறை தொழில்நுட்ப அடிப்படையிலான, இரு வணிக பயன்பாட்டு ராக்கெட்டுகளை தயாரித்து சீனா வெளியிட்டிருக்கிறது.

இந்த ராக்கெட்டுகள் ஒவ்வொன்றும், ஒன்றரை டன் அளவு எடையுள்ள உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செயற்கைக்கோள்களை சுமந்து செல்லும் திறன் கொண்டதாக கட்டமைக்கப்படுகின்றன.

திட, திரவ எரிபொருளில் இயங்கவல்ல வகையில் உருவாக்கப்படும் வணிக பயன்பாட்டு ராக்கெட்டுகளை கட்டமைக்க 140 கோடி அமெரிக்க டாலர்கள் மதிப்பிலான நிதியை, பொதுமக்களிடம் இருந்தே திரட்டவும் சீனா முடிவு செய்திருக்கிறது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments