காங்கிரஸ் எம்.பி. வசந்தகுமார் மீது 3 பிரிவுகளின்கீழ் வழக்குப் பதிவு

0 690

தேர்தல் நடத்தை விதிகளை மீறி நாங்குநேரி தொகுதிக்குச் சென்றதாக, கன்னியாகுமரி எம்.பி. வசந்தகுமார் மீது 3 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். 

நாங்குநேரி தொகுதியில் வாக்குப்பதிவு நடைபெற்றுக்கொண்டிருக்கும்போது வசந்தகுமார் அங்கு சென்று பார்வையிட்டதாகக் கூறப்படுகிறது.

குறிப்பிட்ட தொகுதியில் வாக்குரிமை இல்லாத ஒரு அரசியல் தலைவர், அந்தத் தொகுதிக்குச் செல்லக் கூடாது என்ற விதியை மீறும் வகையில் செயல்பாடுகள் உள்ளதாக வசந்தகுமாரை, இரு முறை போலீசார் எச்சரித்ததாக சொல்லப்படுகிறது.

அதனையும் மீறி அவர் கலுங்கடியிலுள்ள வாக்குச்சாவடிக்குச் சென்றதாகக் கூறி அவர் உட்பட 5 பேர் மீது 3 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். தொடர்ந்து அவர்களை காவல்நிலையம் அழைத்துச் சென்று விசாரித்த போலீசார், பின்னர் ஜாமீனில் விடுவித்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments