இந்தூர் ஹோட்டலில் ஏற்பட்ட பயங்கர தீ, நீண்ட நேரப் போராட்டத்திற்கு பின்னர் கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது

0 318

மத்தியபிரதேசத்திலுள்ள ஹோட்டல் ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்து, நீண்ட போராட்டத்திற்கு பிறகு கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது.

இந்தூர் அடுத்த விஜயநகர் பகுதியிலுள்ள கோல்டன் ஹோட்டலில், காலையில் திடீரென தீவிபத்து ஏற்பட்டது. சிறிது நேரத்திற்குள்ளாகவே ஹோட்டல் முழுவதும் பரவிய தீயால், ஹோட்டலின் முன்பக்கம் கொழுந்து விட்டு எரிந்தது. தகவலறிந்து வந்த தீயணைப்புத் துறையினர், தீயை முழுவதுமாக அணைத்தனர்.

இந்த விபத்தில் யாருக்கும் காயமேதும் ஏற்படாத நிலையில், தீவிபத்தின் போது ஹோட்டலின் உள்ளே சிக்கிக் கொண்ட 5 பேர் பத்திரமாக மீட்கப்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

மேலும் அவர்களுள் ஒருவர் மாடியிலிருந்து குதிக்க முயன்றதாகவும், அவரை தடுத்து தீயணைப்புத்துறையினர் பாதுக்கப்பாக மீட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தீ விபத்துக்கான காரணம், சேத மதிப்புகள் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments