உள்ளாட்சி, சுகாதாரத் துறைகள் இணைந்து செயல்பட்டால் டெங்குவை கட்டுப்படுத்தலாம்

0 160

உள்ளாட்சி, சுகாதாரம் உள்ளிட்ட துறைகள் இணைந்து செயல்பட்டால் டெங்கு கொசுக்கள் உற்பத்தியாவதையும், டெங்கு காய்ச்சலையும் கட்டுப்படுத்தலாம் என உயர்நீதிமன்ற மதுரைக்கிளை கருத்து தெரிவித்துள்ளது. 

டெங்கு போன்ற நோய்களை பரப்பும் கொசுக்கள் உற்பத்தியாவதை தடுக்க போர்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்கக் கோரியும், டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தனிவார்டு அமைத்து 24 மணி நேரமும் கண்காணித்து சிகிச்சை அளிக்கக் கோரியும் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் பொதுநல மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது.

இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் சிவஞானம், தாரணி அமர்வு, மனுதாரர் பொதுவாக குற்றச்சாட்டுகளை முன்வைக்காமல், உரிய ஆதாரங்களுடன் பொதுநல மனு தாக்கல் செய்ய வேண்டும் என அறிவுறுத்தினர். அப்போது சுகாதாரத்துறை முதன்மை செயலர் இவ்விவகாரத்தில் நேரடியாக தலையிட்டு கண்காணித்து வருவதாக அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதனைக் கேட்ட நீதிபதிகள், உள்ளாட்சி, சுகாதாரம் உள்ளிட்ட துறைகள் இணைந்து தீவிரமாக செயல்பட்டால், கொசுக்கள் உற்பத்தியாவதை கட்டுபடுத்தலாம் என கூறி வழக்கை முடித்து வைத்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments