6 முதல் 8 ஆம் வகுப்பு வரை கரும்பலகைக்கு பதில் ஸ்மார்ட் போர்டு - அமைச்சர்

0 273

தமிழகத்தில் 6 முதல் 8 ஆம் வகுப்பு வரை உள்ள 90 ஆயிரம் பள்ளிகளில் கரும்பலகை அகற்றப்பட்டு ஸ்மார்ட் போர்டுகள் அமைக்கப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார்.

தஞ்சாவூர் சரஸ்வதி மகால் நூலகம் மற்றும் ஆய்வு மையம், பொது நூலகமாக்கப்பட்டதின் நூற்றாண்டு விழா அரண்மணை வளாகத்தில் நடந்தது. இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசிய பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன், தமிகத்தில் உள்ள உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளி வகுப்புகள் முழுவதும் அடுத்த மாதத்திற்குள் கணிணி மயமாக்கப்படும் என்றார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், சரஸ்வதி மகால் நூலகத்தின் வளாச்சிக்காக தமிழக அரசு தற்போது வழங்கி வரும் 72 லட்சம் ரூபாயை உயர்த்தி ஒரு கோடி ரூபாயாக வழங்கப்படும் என்று கூறினார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments