அடுத்தடுத்து தாக்கும் புயல்களால் நிலைக்குலைந்துள்ள ஜப்பான்

0 277

ஹகிபிஸ் புயலால் பாதிக்கப்பட்டுள்ள ஜப்பானை நோக்கி, மேலும் இரண்டு புயல்கள் நகர்ந்துவருவதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால் அந்நாட்டு மக்கள் அச்சத்தில் உறைந்துள்ளனர்.

ஜப்பானில் கடந்த வாரம் ஏற்பட்ட ஹகிபிஸ் புயல் காரணமாக 78 பேர் உயிரிழந்ததாகவும் சுமார் 400 பேர் வரை படுகாயமடைந்ததாகவும் தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில், நியோகுரி எனும் புதிய புயல் டோக்கியோ பகுதியை நாளை கடக்கவுள்ளதாகவும், புலாய் எனும் மற்றொரு புயல், வரும் 26ஆம் தேதி ஜப்பானின் தெற்கு மற்றும் கிழக்கு கடற்கரையை கடக்கவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் அந்நாட்டு மக்கள் அச்சத்தில் உள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments