ஈச்சம்பாடி அணைக்கட்டிலிருந்து தண்ணீர் திறக்க முதலமைச்சர் உத்தரவு

0 223

தருமபுரி மாவட்டத்திலுள்ள ஈச்சம்பாடி அணைக்கட்டின் வலது மற்றும் இடதுபுற வாய்க்கால்களில் தண்ணீர் திறக்க முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி உத்தரவிட்டுள்ளார்.

இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், ஈச்சம்பாடி அணைக்கட்டிலிருந்து தண்ணீர் திறந்துவிட வேளாண் பெருங்குடி மக்களிடமிருந்து   கோரிக்கைகள் வந்ததாகவும், அதனை ஏற்று ஈச்சம்பாடி அணைக்கட்டின் வலது மற்றும் இடதுபுற வாய்க்கால்களில் வரும் 25ம் தேதி முதல் தண்ணீர் திறந்து விட ஆணையிட்டுள்ளதாகவும் முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.

இதன் மூலம் தருமபுரி மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டங்களில் உள்ள 6 ஆயிரத்து 250 ஏக்கர் பரப்பளவிலான நிலங்கள் பாசன வசதி பெறும் என தெரிவித்துள்ள முதலமைச்சர், நீரை சிக்கனமாக பயன்படுத்தி, நீர் மேலாண்மை மேற்கொண்டு உயர்மகசூல் பெற வேண்டும் என விவசாயப் பெருமக்களை கேட்டுக் கொண்டுள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments