சகோதரனுடன் கருத்து வேறுபாடு நிலவுவதை ஒப்புக்கொண்ட இளவரசர் ஹாரி

0 222

தானும், தனது சகோதரன் வில்லியமும், கருத்து வேறுபாடுடன் வெவ்வேறு பாதைகளில் பயணித்து கொண்டிருப்பதை இங்கிலாந்து இளவரசர் ஹாரி ஒப்புக்கொண்டுள்ளார்.

அமெரிக்க நடிகை மேகன் மார்க்கிளை இங்கிலாந்து இளவரசர் ஹாரி திருமணம் செய்த பின் அவருக்கும் அவரது சகோதரன் வில்லியமுக்கும் இடையே கருத்து வேறுபாடு நிலவுவதாக கடந்த சில மாதங்களாக வதந்தி செய்திகள் வெளியாகின.

அண்மையில், தனது மனைவி மேகனுடன் தென் ஆப்ரிக்காவுக்கு சுற்றுபயணம் மேற்கொண்ட ஹாரி, அங்கு செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.

அப்போது, தனது சகோதரன் வில்லியமுடன் தனக்கு கருத்து வேறுபாடு இருப்பதை ஒப்புக்கொண்ட ஹாரி, இருவரும் வேலைகளில் பரபரப்பாக இருப்பதால், ஒருவரை ஒருவர் சந்தித்துக்கொள்ள நேரம் கிடைப்பதில்லை என தெரிவித்தார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments