மத்திய பிரதேசத்திலுள்ள ஹோட்டல் ஒன்றில் திடீர் தீவிபத்தால் பரபரப்பு

0 249

மத்திய பிரதேசத்தில் ஹோட்டல் ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தால் பரபரப்பு நிலவியது.

மத்திய பிரதேச மாநிலம் இந்தூர் அருகே கோல்டன் ஹோட்டலில் திடீரென தீவிபத்து ஏற்பட்டுள்ளது. வேகமாக பரவிய தீயானது கொழுந்து விட்டு எரியத் துவங்கிய நிலையில், தீயணைப்புத்துறையினருக்கு தகவலளிக்கப்பட்டது. இதையடுத்து விரைந்து வந்த தீயணைப்பு துறையினர் தீயை கட்டுக்குள் கொண்டுவருவதற்காக போராடி வருகின்றனர்.

தீ விபத்துக்கான காரணம் குறித்து கண்டறியப்படாத நிலையில், தீவிபத்து ஏற்பட்ட போது ஹோட்டலின் உள்ளே இருந்தவர்கள் அனைவரும் வெளியேற்றப்பட்டதாக கூறப்படுகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments