நாடாளுமன்ற கூட்டத் தொடர் வரும் நவம்பர் 18ந் தேதி கூடுகிறது

0 211

நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் அடுத்த மாதம் 18ஆம் தேதி தொடங்கி, டிசம்பர் 13ஆம் தேதி வரை நடைபெறுகிறது.

கடந்த 2 ஆண்டுகளாக நவம்பர் 21ஆம் தேதி தொடங்கி, ஜனவரி முதல் வாரம் வரை நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நடைபெற்றது.  இந்நிலையில், நாடாளுமன்ற விவகாரங்களுக்கான அமைச்சரவை குழு, கூடி நவம்பர் 18ஆம் தேதி தொடங்கி டிசம்பர் 13ஆம் தேதி வரை நாடாளுமன்றத்தை நடத்துவது என முடிவெடுத்துள்ளது. 

கார்ப்பரேட் வரி விகிதங்களை குறைக்கும் வகையில் வருமான வரி சட்டம் மற்றும் நிதிச் சட்டத்தில் மாற்றம் செய்த அவசர சட்டம், இ-சிகரெட்டுகளுக்கு தடை விதித்த அவசர சட்டம் ஆகிய 2 அவசர சட்டங்கள், சட்டங்களாக நிறைவேற்றப்படும்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments