குழந்தைகள் மருத்துவமனையில் தீ விபத்து - 5 மாத குழந்தை உயிரிழப்பு

0 235

தெலங்கானா தலைநகர் ஐதராபாத்தில் குழந்தைகள் நல மருத்துவமனை ஒன்று தீப்பிடித்ததில் 5 மாத பச்சிளம் குழந்தை பரிதாபமாக உயிரிழந்தது. எல்.பி. நகரில் உள்ள சைன் குழந்தைகள் நல மருத்துமனையின் 3 ஆவது மாடியில் தீவிர சிகிச்சை பிரிவு உள்ளது.

அங்கு இன்குபேட்டர்களில் 6 பச்சிளம் குழந்தைகள் சிகிச்சை பெற்று நிலையில் அதிகாலை 3 மணியளவில் தீப்பற்றியதாக கூறப்படுகிறது. பின்னர் தீயணைப்புத்துறையினருக்கு தகவல் அளிக்கப்பட்டு தீ அணைக்கப்பட்டது.

இந்த விபத்தில் 5 மாத பச்சிளம் குழந்தை உயிரிழந்தது. மற்ற 5 குழந்தைகள் தீக்காயங்களுடன் மீட்கப்பட்டு வேறு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளன. இன்குபேட்டரில் ஏற்பட்ட மின்கசிவால் இந்த தீ விபத்து நிகழ்ந்துள்ளதாக கூறப்படுகிறது.

 

 

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments