சிரியாவில் சொந்த விமான தளத்தை தகர்த்த அமெரிக்க வீரர்கள்

0 241

சிரியாவிலிருந்து வீரர்களை விலக்கிக் கொள்ளும் முன், அமெரிக்க படையினர் தங்கள் சொந்த விமான தளத்தை குண்டு வைத்து தகர்த்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

வடகிழக்கு சிரியாவின் அல்-ஹசாக் மாகாணத்தில், டல் டாமர் நகர் அருகே, அமெரிக்காவின் படைத் தளம் அமைந்திருந்தது.

அமெரிக்க ஆதரவு பெற்ற குர்து படைகளுக்கும் துருக்கி ராணுவத்திற்கும் இடையே அப்பகுதியில் சண்டை மூண்டது.

குர்து படைகள் அமெரிக்க ஆதரவு பெற்றவை என்றாலும், இந்த மோதலில் தலையிட்டுக் கொள்ள விரும்பவில்லை எனக் கூறி, அமெரிக்கா தனது வீரர்களை விலக்கிக் கொண்டது. அப்படி வெளியேறும் முன், டல் டாமர் நகர் அருகே அமைத்திருந்த விமான தளத்தை அமெரிக்க வீரர்கள் குண்டுவைத்து தகர்த்துவிட்டே வெளியேறியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதேபோல, அல்-ஹசாக் மாகாணத்தில் அஸ்-ஷபேயா அருகே அமைந்துள்ள மற்றொரு விமான தளத்தையும் கைவிட்டு வெளியேற அமெரிக்க வீரர்கள் திட்டமிட்டிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments