கர்த்தார்புர் செல்லும் பக்தர்களிடம் 20 டாலர் கட்டணம் வசூலிப்பது வெட்கக்கேடானது

0 408

கர்த்தார்புர் செல்லும் பக்தர்களிடம் 20 டாலர் கட்டணம் வசூலிப்பது வெட்கக்கேடானது என்று பாகிஸ்தானை மத்திய அமைச்சர் ஹர்சிம்ரத் கவுர் சாடியுள்ளார்.

அடுத்த மாதம் திறக்கப்பட உள்ள கர்த்தாபுருக்கு செல்லும் சீக்கியர்களிடம் வசூலிக்கப்படும் பணத்தல் பாகிஸ்தான் பொருளாதாரம் மேம்படும் என்று பிரதமர் இம்ரான் கான் கூறியிருப்பதற்கும் ஹர்சிம்ரத் கண்டனம் தெரிவித்துள்ளார்.

டிவிட்டரில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ள அவர், பின்னர் வீடியோ ஒன்றையும் பகிர்ந்தார். அதில் பாகிஸ்தானின் நடவடிக்கைகள் வெட்கக்கேடானது என்றும் ஏழை பக்தர்களால் எப்படி கட்டணம் செலுத்த முடியும் என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.

பக்தியை வியாபாரமாக்க பாகிஸ்தான் முயற்சிப்பதாகவும் ஹர்சிம்ரத் கவுர் விமர்சித்துள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments