இறந்த திமிங்கலத்தின் எலும்புகளை உண்ணும் ஆக்டோபஸ்

0 474

அமெரிக்காவில் கடலுக்கடியில் நடத்தப்பட்ட ஆய்வில் இறந்த திமிங்கலத்தின் எலும்புகளை ஆக்டோபஸ்கள் உண்ணும் அதிர்ச்சி வீடியோ வெளியாகி உள்ளது.

பொதுவாக ஆக்டோபஸ்கள் தனக்குத் தேவையான உயிரினத்தைப் பிடித்து அதன் ரத்தத்தையும் உடல் சதைகளையும் அப்படியே உண்ணும் பழக்கம் கொண்டவை. அதற்கேற்ற வகையில்தான் அதன் உடலமைப்பும், வாயின் தகவமைப்பும் இருந்து வந்ததாக ஆய்வாளர்கள் நம்பி வந்தனர்.

இந்நிலையில் அமெரிக்காவின் கலிபோர்னியாவில் உள்ள மாண்டரே வளைகுடா தேசிய கடல் உயிரியல் பூங்காவில் தானியங்கி நீர்மூழ்கி இயந்திரம் மூலம் ஆய்வு நடத்தினர். அப்போது இறந்து கிடந்த திமிங்கலத்தின் எலும்புகளையும், மீததுள்ள சதைகளையும் ஏராளமான ஆக்டோபஸ்கள் சாப்பிட்டுக் கொண்டிருந்தன.

இதனைக் கண்ட ஆய்வாளர்கள் அதிர்ச்சிக்கு உள்ளாயினர். தானாக வேட்டையாடி உண்ணும் பழக்கம் கொண்ட ஆக்டோபஸ்கள் தற்போது மற்ற விலங்குகள் வேட்டையாடிய மிச்சத்தையும் உண்ணும் பழக்கம் கொண்டது என்பது தற்போது தெரியவந்துள்ளதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments