8 போலீசாரைச் சுட்டுக் கொன்று விட்டு தப்பிய கடத்தல் மன்னனின் இரு மகன்கள்

0 341

மெக்ஸிகோவில் போதைப் பொருள் கடத்தல் மன்னன் எல் சாப்போஸின் இரு மகன்களும் கைது செய்யப்பட்டனர். ஆனால் 8 போலீசாரைச் சுட்டுக் கொன்று விட்டு இருவரும் தப்பிச் சென்றுள்ளனர்.

உலகின் பல்வேறு நாடுகளுக்கு போதைப் பொருள் கடத்தும் நபர்தான் எல் சாப்போஸ். இவரது மூத்த மகன் இவான் குஸ்மனும், 2வது மகன் ஒவிடியோவும் ஒரே வீட்டில் இருப்பதை அறிந்த மெக்ஸிகோ போலீசார் இருவரையும் கைது செய்தனர்.

ஆனால் சற்று நேரத்தில் இவான் போலீசாரின் பிடியில் இருந்து தப்பினார். தொடர்ந்து தனது ஆதரவாளர்களுடன் வந்த இவானுக்கும் போலீசாருக்கும் இடையே நீண்ட நேரம் நடந்த துப்பாக்கிச் சண்டையில் இருதரப்பிலும் 8 பேர் கொல்லப்பட்டனர்.

பின்னர் தனது தம்பியை இவான் அங்கிருந்து மீட்டுச் சென்றான். இதையடுத்து இருவரையும் கைது செய்ய ராணுவத்தினர் வரவழைக்கப்பட்டுள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments