கர்த்தார்புர் குருதுவாரா நவம்பர் 9ம் தேதி திறப்பு

0 273

சீக்கியர்களுக்குரிய புனிதத் தலமான கர்த்தார்புர் குருதுவாரா வரும் நவம்பர் 9ம் தேதி முதல் பொதுமக்களுக்கு திறந்துவிடப்படும் என்று பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் அறிவித்துள்ளார்.

சீக்கிய சமயத்தைத் தோற்றுவித்த முதல் குருவான குருநானக் தேவின் 550வது பிறந்தநாளை முன்னிட்டு இந்தியாவில் கர்த்தார்புருக்கான பாதையை பிரதமர் மோடி திறந்துவைப்பார். இந்நிலையில் பாகிஸ்தானும் அதிகாரப்பூர்மாக நவம்பர் 9ம் தேதி கர்த்தார்புர் திறக்கப்படுவதாக அறிவித்துள்ளது.

உலகம் முழுவதிலும் இருந்து சீக்கியர்கள் இங்கு விசா இல்லாமல் யாத்திரை மேற்கொள்ளலாம். இந்த குருதுவாராவுடன் தர்பார் சாகிப், டேரா பாபா நானக் ஆலயம் போன்றவை இணைக்கப்பட்டு சீக்கியர்கள் தரிசிக்க அனுமதிக்கப்பட்டுள்ளது.

சீக்கியர்களின் மிகப்பெரிய வழிபாட்டுத் தலமாக இது மாறும் என்றும் பாகிஸ்தானுக்கு பொருளாதார ஏற்றத்தைத் தரும் என்றும் இம்ரான் கான் தெரிவித்துள்ளார்.

கர்த்தார்புர் குருதுவாரா தொடர்பாக மட்டும் இந்தியா-பாகிஸ்தான் இடையே பலசுற்று பேச்சுவார்த்தைகள் நடைபெற்றன. கர்த்தார்புர் வளாகத்திற்கு வரும் பக்தர்களுக்கு விதிக்கப்பட்ட 20 டாலர் கட்டணத்தை ரத்து செய்யுமாறு பாகிஸ்தானுக்கு இந்தியா வலியுறுத்தி வருகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments