பணியிடமாற்றமாகும் ஜம்மு-காஷ்மீர் போலீசார்

0 383

ஜம்மு-காஷ்மீரில் பணியாற்றிவரும் லடாக்கைச் சேர்ந்த சுமார் 380 போலீசார், புதிய யூனியன் பிரதேசமாக செயல்படவுள்ள லடாக்குக்கு பணியிடமாற்றம் செய்யப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ஜம்மு காஷ்மீர் மாநிலத்திற்கு வழங்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்து, கடந்த ஆகஸ்ட் மாதம் ரத்து செய்யப்பட்டதுடன், ஜம்மு- காஷ்மீர் மற்றும் லடாக் என இரண்டு யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்பட்டன.

வரும் 31ஆம் தேதியிலிருந்து அவை அதிகாரப்பூர்வ யூனியன் பிரதேசங்களாக செயல்படவுள்ளன. இந்நிலையில், ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் பணிபுரியும் லடாக்கைச் சேர்ந்த 385 போலீசார், புதிதாக அமையவுள்ள யூனியன் பிரதேசமான லடாக்கின் நிர்வாக கட்டுப்பாட்டில் இயங்கும் வகையில் பணிமாற்றம் செய்யப்படவுள்ளனர்.

மத்திய உள்துறை அமைச்சகம் அளித்த அனுமதியின் கீழ் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. சண்டிகர், அந்தமான் போன்ற யூனியன் பிரதேசங்களில் பணிபுரியும் போலீசாருக்கு வழங்கப்படுவதுபோன்றே, லடாக் போலீசாருக்கும் ஊதியம் மற்றும் சலுகைகள் வழங்கப்படவுள்ளன.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments