பாக். அத்துமீறல் தாக்குதலில் 2 இந்திய ராணுவ வீரர்கள் உயிர் தியாகம்

0 403

எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டுப் பகுதியில், பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி நடத்திய தாக்குதலில், இந்திய ராணுவ வீரர்கள் 2 பேர் உயிர் தியாகம் செய்தனர்.

எல்லையையொட்டிய பகுதியைச் சேர்ந்த பொதுமக்களில் ஒருவரும் உயிரிழந்திருப்பதாக, ராணுவ வட்டாரங்கள் தெரிவித்திருக்கின்றன.
எல்லை அருகே பாகிஸ்தானில் பயங்கரவாதிகள், 20 முகாம்கள் அமைத்து, இந்தியாவிற்குள் ஊடுருவ தயாராக இருப்பதாக, உளவுத்துறை எச்சரித்திருக்கிறது. இந்த தீவிரவாதிகள், இந்தியாவிற்குள் ஊடுருவ பாகிஸ்தான் ராணுவம் உதவி வருவதாகவும் உளவுத்துறை கூறியிருக்கிறது.

இதனைத் தொடர்ந்து, இந்திய ராணுவம், காஷ்மீரை ஒட்டி அமைந்துள்ள எல்லைப் பகுதியில், துருப்புகளை அதிகரித்திருப்பதோடு, கண்காணிப்பையும் தீவிரப்படுத்தியிருக்கிறது. இந்நிலையில், சண்டைநிறுத்த ஒப்பந்தத்தை மீறி, எல்லையில், இந்திய துருப்புகளை குறிவைத்து, பாகிஸ்தான் ராணுவம் தாக்குதல் நடத்தியது.

ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தின் டாங்தார் மண்டலத்திற்குட்பட்ட குப்வாரா பகுதியில், இந்த தாக்குதல் சம்பவம் நடைபெற்றுள்ளது. எல்லைக்கு அப்பாலிருந்து பாகிஸ்தான் ராணுவம் நடத்திய தாக்குதலில், இந்திய ராணுவ வீரர்கள் இரண்டு பேர் உயிரிழந்தனர்.

இந்த தாக்குதலில், ராணுவ நிலைகளுக்கு அருகில் இருந்த இரண்டு வீடுகள் பலத்த சேதத்தை எதிர்கொண்டன. இந்த சம்பவத்தில், குப்வாரா பகுதியைச் சேர்ந்த பொதுமக்களில் ஒருவர் உயிரிழந்தார். மூன்று பேர் படுகாயமடைந்திருப்பதாக, ராணுவ வட்டாரங்கள் தெரிவித்திருக்கின்றன. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments