துருக்கி, மலேசியா நாடுகளின் மீது இந்தியா கோபம்

0 570

காஷ்மீர் விவகாரத்தில் தொடர்ந்து பாகிஸ்தானுக்கு ஆதரவாகப் பேசி வரும் துருக்கியும், மலேசியாவும் இந்தியாவின் கோபத்திற்கு ஆளாகியுள்ளன.

ஜம்மு-காஷ்மீர் விவகாரத்தில் மலேசியாவும், துருக்கியும், பாகிஸ்தானுக்கு ஆதரவாக பொது வெளியில் பேசி வருகின்றன. மேலும் எஃப்ஏடிஎஃப் (FATF) எனப்படும் சர்வதேச தீவிரவாத நிதி தடுப்பு அமைப்பிலும், பாகிஸ்தானுக்கான அந்நாட்டு அரசுகளின் ஆதரவு தொடர்கிறது. இதனால் துருக்கியும், மலேசியாவும் இந்தியாவின் கோபத்திற்கு ஆளாகியுள்ளன. மலேசியாவிடம் இருந்து பாமாயில் வாங்குவதை நிறுத்த வலியுறுத்தி பாய்காட் மலேசியா என்ற ஹேஷ் டேக் டிரெண்டாகி வருகிறது.

மலேசியாவிடம் இருந்து பாமாயில் இறக்குமதியை குறைத்துக் கொள்வதென மத்திய அரசும் முடிவு செய்துள்ளது. துருக்கிக்கு எதிராக ஏற்கெனவே இந்தியா நடவடிக்கை எடுத்துள்ளது. அதன்படி, இந்தியக் கடற்படைக்கு, கப்பல்கள் கட்டிக் கொடுக்கும் பணி செய்து வந்த துருக்கியின் அனடோலு கப்பல் கட்டும் தளத்திற்கு இனி ஒப்பந்தம் கிடைக்காது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments