சேலத்தில் ஸ்வீட் கடையில் 3 டன் பாலிதீன் பைகள் பறிமுதல்..!

0 244

சேலத்தில் இயங்கி வரும் “நெல்லை லாலா ஸ்வீட்ஸ்” கடையில் இருந்து தடை செய்யப்பட்ட 3 டன் பாலிதீன் பைகளை பறிமுதல் செய்த மாநகராட்சி அதிகாரிகள், இரண்டரை லட்ச ரூபாய் அபராதம் விதித்தனர்.

தீபாவளி நெருங்குவதை ஒட்டி, மாநகரம் முழுவதும் பல்வேறு குழுக்கள் அமைத்து அதிகாரிகள் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் குறித்த சோதனையில் இறங்கியுள்ளனர். அந்த வகையில் சேலம் டவுன் ராஜகணபதி கோவில் அருகே உள்ள “நெல்லை லாலா ஸ்வீட்ஸ்” கடைக்கு வந்த மாகநராட்சி அதிகாரிகள், கடை மற்றும் கிடங்கில் ஆய்வு மேற்கொண்டனர்.

அப்போது கிடங்கில் 3 டன் அளவிலான தடை செய்யப்பட்ட பாலிதீன் பைகள் இருப்பதைப் பார்த்த அதிகாரிகள், அவற்றை பறிமுதல் செய்து கடை நிர்வாகத்துக்கு இரண்டரை லட்ச ரூபாய் அபராதம் விதித்தனர். இதுபோன்ற ஆய்வுகள் தொடரும் என்று கூறிய அதிகாரிகள், அரசின் பிளாஸ்டிக் ஒழிப்பு நடவடிக்கைக்கு பொதுமக்களும் வணிகர்களும் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என கேட்டுக்கொண்டனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments