உரிய நேரத்தில் வங்கிக் கணக்கில் இருந்து பணம் எடுக்கமுடியாததால் முதியவர் உயிரிழப்பு

0 272

மும்பையில் தனது வங்கிக்கணக்கில் 80 லட்சம் ரூபாய் பணம் இருந்தும் இதய அறுவை சிகிச்சைக்கு கட்டணம் கட்ட முடியாமல் முதியவர் உயிரிழந்தார்.

மும்பை புறநகரான முலுண்டைச் சேர்ந்த 83 வயதான முர்லிதர் தர்ரா, பஞ்சாப் மகராஷ்டிரா வங்கியில் 80 லட்சம் ரூபாய் பணம் டெபாசிட் செய்துள்ளதாக கூறப்படுகிறது. தர்ராவுக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டதால் அறுவை சிகிச்சைக்கு அதிகளவில் பணம் தேவைப்பட்டுள்ளது.

ஆனால் பஞ்சாப் மகராஷ்டிரா வங்கியில் நடைபெற்ற கடன் முறைகேட்டை தொடர்ந்து அதிகபட்சமாக ஒரு மாதத்திற்கு 40 ஆயிரம் ரூபாய்தான் எடுக்கமுடியும் என்று ரிசர்வ் வங்கி வரம்பு நிர்ணயித்துள்ளதால் அறுவை சிகிச்சைக்கு தேவையாக பணத்தை முர்லிதர் தர்ரா வங்கிக் கணக்கில் இருந்து எடுக்கமுடியவில்லை.

இதனால் உரிய நேரத்தில் அறுவை சிகிச்சை செய்ய முடியாமல் அவர் பரிதாமாக உயிரிழந்தார். இந்த நிலையில் தங்கள் பணத்தை திரும்ப தர வலியுறுத்தி பஞ்சாப் மகராஷ்டிரா வங்கி வாடிக்கையாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

 

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments