நீலகிரியில் வெளுத்துவாங்கும் மழை.. 54 இடங்களில் நிலச்சரிவால் பாதிப்பு..!

0 335

நீலகிரி மாவட்டத்தில் தொடர்ந்து பெய்யும் மழையால் பல இடங்களில் நிலச்சரிவும், ஆறுகளில் வெள்ளப்பெருக்கும் ஏற்பட்டுள்ளது.

நீலகிரி மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை இயல்பைக்காட்டிலும் கூடுதலாக 30 சதவீதம் பெய்த நிலையில், தற்போது வடகிழக்கு பருவமழையும் மிகத் தீவிரமாக பெய்து வருகிறது.

நேற்று இரவு முழுவதும் இடியுடன் கொட்டிய கனமழையால் உதகையில் இருந்து மஞ்சூர் கின்னகொரை வரை நெடுஞ்சாலையில் 54 இடங்களில் மிகப்பெரிய அளவில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது.

20 க்கும் மேற்பட்ட கிராமங்கள் துண்டிக்கப்பட்டு மக்கள் கடும் அவதிக்கு ஆளாகியுள்ளனர். இப்பகுதியில் போக்குவரத்து நிறுத்தப்பட்டு பாறைகளை அகற்றி மண் சரிவை அகற்றும் பணியில் நெடுஞ்சாலை துறையினர் ஈடுபட்டுள்ளனர்.

மஞ்சூர், குந்தா, மற்றும் குந்தா பாலம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் குடியிருப்புகளின் முன்பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவால் 100க்கும் மேற்பட்ட வீடுகள் அபாயகரமாக அந்தரத்தில் தொங்கிக் கொண்டு உள்ளன. அதில் இருந்த மக்கள் மீட்கப்பட்டு பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டு உள்ளனர். இப்பகுதியை தீவிரமாக கண்காணித்து வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

கொட்டித் தீர்க்கும் கனமழையால் 10 ஆண்டுகளுக்குப் பிறகு அப்பர் பவானி, குந்தா, அவலாஞ்சி அணைகள் நேற்று மாலையில் திறக்கப்பட்டுள்ளதால், சிற்றாறுகளில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது.

அணைகளில் இருந்து திறக்கப்பட்டுள்ள நீர் மேட்டுபாளையம் பவானி ஆற்றில் கலப்பதால், பவானி ஆற்றின் கரையோரம் வசிக்கும் 40 கிராம மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments