முகநூலில் நட்பு.. அமாவாசை காதல்..! கைவிட்ட காவல் அதிகாரி

0 421

நாகையில் இளம்பெண்ணை காதலிப்பதாகக் கூறி கர்ப்பமாக்கிவிட்டு, அமைதிப்படை சினிமா அமாவாசை பாணியில் பாதிக்கப்பட்ட பெண்ணை மிரட்டும் காவல் உதவி ஆய்வாளரின் செல்போன் உரையாடல்கள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

மயிலாடுதுறையைச் சேர்ந்த இளம்பெண்ணும் திட்டச்சேரி காவல் நிலையத்தில் உதவி ஆய்வாளராக பணி புரிந்து வரும் விவேக் ரவிராஜும் முகநூல் மூலம் நண்பர்களாகி உள்ளனர்.

முக நூல் நட்பு, காதலானதும் செல்போனில் பலமணி நேரம் பேசி, இருவரும் தனி அறையில் சந்தித்து காதலை வளர்த்ததால், அந்தப் பெண் கர்ப்பமானதாக கூறப்படுகின்றது. தான் கர்ப்பமான விவரத்தை விவேக் ரவிராஜிடம் கூறி செல்போனில் அழும் நிலையில். தான் நேரில் வருவதாக உதவி ஆய்வாளர் விவேக் ரவிராஜ் வாக்குறுதி அளித்துள்ளார்

அதன் தொடர்ச்சியாக திருமணம் செய்து கொள்வதாக ஆசைவார்த்தை கூறி அப்பெண்ணை சென்னைக்கு அழைத்துச் சென்று உதவி ஆய்வாளர் விவேக் ரவிராஜ் கர்ப்பத்தையும் கலைக்கச் செய்துள்ளார். அதன் பின் தனக்கும் கர்ப்பத்திற்கும் சம்பந்தமில்லாதது போல அமைத்திப்படை திரைப்படத்தில் வரும் அமாவாசை போல பேசி நழுவ முயன்றுள்ளார்

ஒரு கட்டத்தில் எஸ்.ஐ. விவேக் ரவிராஜுக்கு எதிராக மயிலாடுதுறை அனைத்து மகளிர் காவல் நிலையம், மற்றும் கோயம்பேடு பேருந்து நிலைய காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டதால் ஆத்திரம் அடைந்து கடுமையாக கொலை மிரட்டல் விடுத்துள்ளார் விவேக் ரவிராஜ்

இதையடுத்து பாதிக்கப்பட்ட அந்த பெண், தனக்கு நேர்ந்த கொடுமைக்கு சாட்சியாக உள்ள இது தொடர்பான மருத்துவ ஆவணங்கள், ஆடியோ ஆதாரங்கள் மற்றும் வாட்ஸ் ஆப் உரையாடல்கள் போன்றவற்றை சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளார்.

அதே நேரத்தில் இது தொடர்பாக விளக்கம் அளித்துள்ள உதவி காவல் ஆய்வாளர் விவேக் ரவிராஜ், அந்த பெண் நடவடிக்கை சரியில்லாதவர் என்றும் 2014 ஆம் ஆண்டிலும் இதே போன்ற குற்றச்சாட்டுகளை வேறு நபர் மீது தெரிவித்த ஆதாரம் தன்னிடம் இருப்பாதாகவும், அந்த பெண்ணின் குற்றச்சாட்டை சட்ட ரீதியாக சந்திக்கப் போவதாகவும் தெரிவித்துள்ளார்.

முகநூலில் நட்பு என்ற பெயரில் பெண்களுக்கு வலைவிரித்து, சிக்கியதும் தேக சுகம் தேடும் சிலரால், ஆண் - பெண் முக நூல் நட்ப வில்லங்கத்தின் மொத்த உருவமாக கருதப்படுகிறது என்பதே கசப்பான உண்மை..!

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments