கொலை வழக்கில் குறைந்த தண்டனை அளித்து தீர்ப்பளித்த நீதிபதிக்கு விளக்கமளிக்க உத்தரவு

0 413

கொலை வழக்கில் குறைந்த தண்டனை அளித்து தீர்ப்பளித்தது தொடர்பாக விருதுநகர் கூடுதல் மாவட்ட அமர்வு நீதிபதி 21ம் தேதி விளக்கமளிக்க உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.

அருப்புக்கோட்டை கல்யாணசுந்தரபுரத்தை சேர்ந்த ராஜமாணிக்கம், அவரது மகன் மாரிராஜ் மற்றும் ஜேசுராஜ் என்ற ஜேசுதாஸ், ஸ்டீபன் ஆகிய 4 பேருக்கு கொலை வழக்கில் 10 ஆண்டு மற்றும் 7 ஆண்டு சிறைத் தண்டனை வழங்கி விருதுநகர் கூடுதல் மாவட்ட  அமர்வு நீதிபதி தீர்ப்பளித்தார்.

இதை ரத்து செய்யக்கோரி 4 பேரும் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மேல்முறையீடு மனு தாக்கல் செய்திருந்தனர். இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் வைத்தியநாதன், ஆனந்த் வெங்கடேஷ் ஆகியோர் அடங்கிய அமர்வு ," கொலை வழக்கில் குறைந்தபட்ச தண்டனையே ஆயுள் தண்டனைதான் என்றும், அப்படியிருக்கையில் அமர்வு நீதிபதி ஒருவர் குறைந்த தண்டனை வழங்கியது ஆச்சரியமாக உள்ளது என்றும் தெரிவித்தனர்.

இதுகுறித்து விருதுநகர் கூடுதல் மாவட்ட அமர்வு நீதிபதி 21ம் தேதி விளக்கமளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டு விசாரணையை ஒத்திவைத்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments