ராணுவ கல்விக்கான சைனிக் பள்ளிகளில் மாணவிகளை சேர்த்துக் கொள்ள அனுமதி

0 230

இந்தியா முழுவதும் செயல்பட்டு வரும் ராணுவ கல்விக்கான சைனிக் பள்ளிகளில் இனி மாணவிகளையும் சேர்த்துக் கொள்ள பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் ஒப்புதல் அளித்துள்ளார்.

இதுதொடர்பாக பாதுகாப்புத்துறை அலுவலகம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், 2 ஆண்டுக்கு முன் மிசோரமில் உள்ள சைனிக் பள்ளிகளில் பரிசோதனை முயற்சியாக மாணவிகள் அனுமதிக்கப்பட்டதாக கூறப்பட்டுள்ளது. இந்த முயற்சிக்கு நல்ல வரவேற்பு கிடைத்ததை அடுத்து நாடு முழுவதும் சைனிக் பள்ளிகளில் மாணவிகளை சேர்க்க முடிவு எடுக்கப்பட்டதாகவும், இதற்கு பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் ஒப்புதல் அளித்துள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதைத்தொடர்ந்து, வரும் 2021-2022-ம் கல்வி ஆண்டில் சைனிக் பள்ளிகளில் மாணவிகளும் சேர்த்துக் கொள்ளப்படுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. சைனிக் பள்ளிகளில் இப்போது மாணவர்கள் மட்டுமே படித்து வருவது குறிப்பிடத்தக்கது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments