நீட் தேர்வில் குறைந்த மதிப்பெண் எடுத்த மாணவர்களுக்கு வாய்ப்பளிக்க வேண்டும்

0 207

காலியாக உள்ள சித்தா, ஆயுர்வேதா படிப்புகளில் நீட் தேர்வில் குறைந்த மதிப்பெண் எடுத்த மாணவர்களை சேர்த்துக்கொள்ள வேண்டும் என மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கோரிக்கை விடுத்துள்ளார். இது தொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில், தமிழகத்தில் சித்தா, ஆயுர்வேதா, யுனானி, ஹோமியோபதி உள்ளிட்ட கல்லூரிகளில் 278 காலி இடங்கள் உள்ளதாக தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், நீட் தேர்வில் நிர்ணயிக்கப்பட்ட கட் ஆப் மதிப்பெண்ணை விட, குறைந்த மதிப்பெண் எடுத்த மாணவர்களைக் கொண்டு காலி இடங்களை நிரப்ப ராஜஸ்தான், கர்நாடகா உயர் நீதிமன்றங்கள் உத்தரவிட்டுள்ளதையும் வைகோ சுட்டிக்காட்டியுள்ளார்.

அதனடிப்படையில் சித்தா, ஆயுர்வேதா, யுனானி உள்ளிட்ட மருத்துவப்படிப்புகளுக்கு நீட் தேர்வில் நிர்ணயிக்கப்பட்ட கட் ஆப் மதிபெண்ணை குறைத்து, குறைந்த மதிபெண் எடுத்த மாணவர்களுக்கு வாய்ப்பளிக்க  மத்திய, மாநில அரசுகள் முன்வர வேண்டும் என வைகோ கேட்டுக்கொண்டுள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments