7 பேரை கருணை அடிப்படையில் விடுதலை செய்ய வேண்டும்

0 303

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறையில் வாடும் ஏழு பேரை கருணை அடிப்படையில் விடுதலை செய்ய வேண்டுமென நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.

சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த சீமான், ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைதாகி சிறையில் உள்ள ஏழு பேருக்கும் எந்த தொடர்பும் இல்லை என்று தெரிவித்தார்.

ராஜீவ்காந்தி கொலை வழக்கில் கைதாகி மதுரையில் சிறையில் இருக்கும் ரவிச்சந்திரன் 7 பேர் விடுதலை குறித்து பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியதை சுட்டிக்காட்டிய சீமான்,  28 ஆண்டுகளாக சிறையில் வாடிவருபவர்களை கருணை அடிப்படையில் விடுதலை செய்ய வேண்டுமென கேட்டுக் கொண்டார்.

மேலும், நாங்குநேரி, விக்கிரவாண்டி தொகுதிகளில் இடைத்தேர்தலை ஒட்டி அங்கு பணப்பட்டுவாடா செய்பவர்களை மக்களே பிடிக்கும் நிலை உள்ளதாகவும் சாடினார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments