செனடாப் சாலை சந்திப்பில் பூங்கா அமைப்பது குறித்து திட்டம்

0 196

சென்னை அண்ணா சாலையில் தேனாம்பேட்டையிலுள்ள செனடாப் சாலை சந்திப்பில் சீரான வாகன போக்குவரத்துக்காக ரவுண்டானா பூங்கா அமைக்க போலீஸார் திட்டமிட்டு வருகின்றனர்.

மெட்ரோ ரயில் பணிகள் அண்ணா சாலையில் நடந்த காரணத்தால் நந்தனம் சந்திப்பில் கடந்த சில ஆண்டுகளாக ஒருவழி போக்குவரத்து மட்டுமே அனுமதிக்கப்பட்டது.

இந்த பணிகள் முடிவடைந்ததையடுத்து, செனடாப் சாலை வழியே வரும் வாகனங்கள், வலதுபுறம் திரும்பி அண்ணாசாலை வழியாக தேனாம்பேட்டை செல்லும் வகையில் இன்று முதல் 3 நாள் சோதனை முயற்சி தொடங்கப்பட்டுள்ளது.

இதில் மக்களும், வாகன ஓட்டிகளும் தெரிவிக்கும் கருத்துகளை கொண்டும், போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது என்பதை பொருத்தும் இந்த திட்டத்தை நிரந்தரமாக்குவது குறித்து போலீஸார் முடிவெடுக்கவுள்ளனர்.

செனடாப் சந்திப்பில் வாகனங்கள் சீராக செல்லும் வகையில், நடுப்பகுதியில் ரவுண்டானா பூங்கா அமைப்பது குறித்தும் போலீஸார் திட்டமிட்டு வருகின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments