சுவர் இடிந்து விழுந்து இரு தொழிலாளர்கள் பலி - இருவர் படுகாயம்

0 230

காஞ்சிபுரம் மாவட்டம் மதுராந்தகம் அருகே தனியார் அழகு சாதன நிறுவனத்தில் நடைபெற்ற கட்டுமானப் பணிகளின் போது சுவர் இடிந்து விழுந்து இரு தொழிலாளர்கள் உயிரிழந்தனர்.

மதுராந்தகத்தை அடுத்த வையாவூர் கிராமத்தில் இயங்கி வரும் தனியார் அழகு சாதன நிறுவனத்தில் கழிவுநீர் தொட்டி கட்டும் பணிகள் நடைபெற்று வந்தன. இந்நிலையில் இன்று பணி நடைபெற்றுக்கொண்டிருந்த போது கட்டுமானத்தில் இருந்த சுவர் எதிர்பாராதவிதமாக இடிந்து விழுந்தது.

இதில் வெங்கடேசன், சக்கரை ஆகிய இரு தொழிலாளர்கள் இடிபாடுகளில் சிக்கி உடல் நசுங்கி பலியாகினர். லோகநாதன், வீரபத்திரன் என்ற மேலும் இரு தொழிலாளர்கள் படுகாயம் அடைந்து செங்கல்பட்டு அரசு பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments