மதுரை மாவட்டத்தில் தூர் வாரி சீரமைக்கப்பட்ட கண்மாய்கள்

0 285

மதுரை மாவட்டத்தில் தூர் வாரி சீரமைக்கப்பட்ட கண்மாய்களில் தமிழ்நாடு நீர் வள பாதுகாப்பு மற்றும் நதிகள் மறுசீரமைப்பு கழகத்தின் நிர்வாக இயக்குநர் சத்யகோபால் ஆய்வு செய்தார்.

நிலத்தடி நீரை பெருக்கவும் மழை நீரை சேமிக்கவும் தமிழகத்தில் உள்ள அனைத்து கண்மாய்கள் நீர்நிலைகளை தூர்வாரி சீரமைக்க தமிழக அரசு உத்தரவிட்டது. அதன்படி மதுரை மாவட்டத்தில் உள்ள கண்மாய்கள் 19 கோடியே 20 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் தூர்வாரி சீரமைக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில் தமிழ்நாடு நீர் வள பாதுகாப்பு மற்றும் நதிகள் மறுசீரமைப்பு கழக நிர்வாக இயக்குநர் சத்யகோபால் மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம், விராதனூர், மாடக்குளம், செக்கானூரணி உள்ளிட்ட இடங்களில் உள்ள கண்மாய்களுக்கு சென்று ஆய்வு மேற்கொண்டார்.

அங்கு விவசாயிகள், மக்கள், ஒப்பந்தக்காரர்கள் உள்ளிட்டோரிடம் குடிமராமத்துப் பணிகளின் விவரங்களை கேட்டறிந்தார். மதுரை மாவட்ட ஆட்சியர் டி.ஜி.வினய், பெரியாறு வைகை வடிநில கோட்டப் பொறியாளர் சுப்ரமணியன், உள்ளிட்ட அதிகாரிகள் உடன் சென்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments