வெளிநாடுகளிலிருந்து கடத்தி வரப்பட்ட ரூ.1 கோடி மதிப்பு தங்கம் பறிமுதல்

0 257

வெளிநாடுகளிலிருந்து சென்னை விமான நிலையத்துக்கு கடத்தி வரப்பட்ட சுமார் ஒரு கோடி ரூபாய் மதிப்பிலான தங்கம் மற்றும் வெளிநாட்டு கரன்சியை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

கொழும்பு, சிங்கப்பூர் மற்றும் துபாய் நாடுகளிலிருந்து இந்தியாவுக்கு தங்கம் கடத்தப்படுவதாக வான்நுண்ணறிவு பிரிவு அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில் கொழும்புவிலிருந்து ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானத்தில் வந்த 4 பேர், சிங்கப்பூரிலிருந்து ஏர் இந்திய எக்ஸ்பிரஸ் விமானத்தில் வந்த 3 பேர் என மொத்தம் 7 பேரை அதிகாரிகள் சோதனையிட்டனர். அவர்களில் ஒருவரை கைது செய்த அதிகாரிகள், சுமார் 2 கிலோ எடையிலான 80 லட்சம் ரூபாய் மதிப்பிலான தங்கத்தை பறிமுதல் செய்தனர்.

இதேபோல், துபாயிலிருந்து இருவேறு விமானங்களில் வந்த ராமநாதபுரத்தை சேர்ந்த பயணிகள் இருவரை சோதனையிட்டபோது, அவர்களிடம் 678 கிராம் எடையிலான 27லட்சம் ரூபாய் மதிப்பு தங்கம் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டு, பறிமுதல் செய்யப்பட்டது.

மேலும் அவர்களிடம் இருந்து 5 பழைய லேப்டாப்கள் மற்றும் 5,600 சிகரெட் குச்சிகளையும் அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இதேபோல் ஸ்ரீ லங்கன் ஏர்லைன்ஸ் விமானத்தில் பயணித்து வந்த அப்தீன் என்பவர் காலனியில் மறைத்து கடத்திய 7 லட்சம் ரூபாய் மதிப்பிலான அமெரிக்க டாலர் நோட்டுகளும் பறிமுதல் செய்யப்பட்டன.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments