தமிழக மீன்வளத்துறை சார்பில் மீன் உணவுத் திருவிழா

0 271

சென்னை ராயப்பேட்டையில் தமிழக மீன்வளத்துறை சார்பில் மீன் உணவுத் திருவிழா நடைபெற்று வருகிறது.

இன்று முதல் வரும் 20-ஆம் தேதி வரை இராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் நடைபெறும் உணவுத் திருவிழாவில் அமைக்கப்பட்டுள்ள 20 அரங்குகளில் பிரபல தனியார் உணவகங்கள் மற்றும் உணவு நிறுவனங்கள் தங்கள் தயாரிப்புகளை விற்பனைக்கு வைத்துள்ளன.

மீன், இறால், நண்டு, கணவாய், மட்டி, உள்ளிட்டவற்றில் இருந்து பல்வேறு சுவைமிக்க ஆரோக்கிய உணவு வகைகள் தயார் செய்யப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது. மீன் உணவின் நன்மைகள் குறித்த விழிப்புணர்வை மக்களிடம் ஏற்படுத்தும் நோக்குடன் தேசிய மீன்வள மேம்பாட்டு வாரியம், தமிழக அரசுடன் இணைந்து இந்த விழாவுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மீன் உணவுகளால் இதய நோய்கள் குறையும் என்பது உள்ளிட்ட விழிப்புணர்வு பிரசுரங்களும் வழங்கப்பட்டன.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments